[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56-ஆக விற்பனை
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வைகோ மனுதாக்கல்
  • BREAKING-NEWS காரைக்குடி- சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரயில் திருச்சி அருகே கிராப்பட்டியில் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு விபத்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்
  • BREAKING-NEWS அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
  • BREAKING-NEWS கிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்

மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது ஏன்?: முதல்வர் விளக்கம்

cm-palanisamy-speech-in-tn-assembly

மக்களுக்கான திட்டங்களுக்காகவும் நிதிக்காகவும் மட்டுமே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு, ஜி.எஸ்.டியால் கட்டுமான பொருட்கள், ஆடைகளின்  விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். ஆண்டுக்கு 36 முறை வணிகர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் கூறினார். அப்போது பேசிய அமைச்சர் ஜெயகுமார், உயர்தர பொருட்களின் விலை மட்டுமே உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், “ ஜி.எஸ்.டி வரியை கொண்டு வந்தது காங்கிரஸ். அதனை ஆதரித்தது திமுக. அதனால் தான் தமிழகத்திற்கு இந்த நிலை ஏற்பட்டது ” என கூறினார். அப்போது பேசிய திமுக சட்டப்பேரவை துணை தலைவர் துரைமுருகன், மறைந்த முதலமைச்சர் எதிர்த்த திட்டங்களை  தற்போது அரசு ஆதரிப்பதாக கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது நடைமுறைப்படுத்திய மதிப்புக் கூட்டு வரியால் ஏற்பட்ட இழப்பீட்டை திமுக வாங்க தவறியதுதான் தற்போது தமிழகத்தின் மோசமான நிதிநிலைக்கு காரணம் என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் அவைக்கு ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்துவதாக தெரிவித்து, ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னது உண்மை தான் போல என தெரிவித்தார். மீண்டும் பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார், 10 மாதங்களுக்கு மேலாக ஆண்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறோம் என்றார்.

இதனைதொடர்ந்து பேசிய  தமிழக முதலமைச்சர் மக்களுக்கான திட்டங்களுக்காகவும் தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதிக்காகவும் மட்டுமே மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவித்தார். யாரிடமும் கைக்கட்டி நிற்பதற்கில்லை என்றும் முதலமைச்சர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close