[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வு மசோதா: திமுக எதிர்ப்பு 

mla-s-wages-increment-dmk-oppossed

சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் பேரவை உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி மசோதாவை இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின்,  “  போக்குவரத்து தொழிலாளர்கள் போராடி வரும் இந்த நேரத்தில் எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை உயர்த்தினால் மக்கள் நம்மைப்பார்த்து எள்ளி நகையாடுவார்கள். இதனை சுட்டிக்காட்டி எம்எல்ஏக்கள் ஊதியத்தை உயர்த்தும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே திமுக எதிர்ப்பு தெரிவித்தது எனக் கூறீனார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close