[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
 • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
 • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
 • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
 • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
 • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
 • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
 • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
 • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
அரசியல் 02 Jan, 2018 11:15 AM

மவுன விரதத்தில் சசிகலா: விசாரணை ஆணையம் முன் ஆஜராக மாட்டார் எனத் தகவல்

jayalalithaa-dead-sasikala-do-not-appear-before-enquiry-commission

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்து உத்தரவிட்டார். ஆணையத்தில் 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி தொடர்ந்து தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு கடந்த 27-ம் தேதி  சம்மன் அனுப்பியிருந்தது. அனை‌வரும் 7 நாட்களுக்குள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்க‌ளிடம் உள்ள ஆவணங்கள்‌ மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவை சமீபத்தில் சந்தித்து, தான் பெற்ற வெற்றி குறித்து தெரிவித்தார். பின் சிறையிலிருந்து திரும்பிய டிடிவி தினகரன், சசிகலா மவுன விரதத்தில் இருப்பதாக கூறினார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிப்பார் என்றும் கூறப்படுகிறது. சசிகலா மவுன விரதத்தில் இருப்பதாலேயே விசாரணை ஆணையம் முன் ஆஜராகமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close