[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி: திருமாவளவன் சந்தேகம்

thirumavalavan-doubt-about-election-commission

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மீண்டும் ரத்து செய்வதற்கான சதி நடைபெறுகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் விஷால் வேட்புமனு விஷயத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி விதிமுறைகளுக்கு முரணாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இவை தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், எதிர்தரப்பு வேட்பாளரை முன்மொழிந்தவர்களை மிரட்டி வேட்புமனுவை நிராகரிக்க செய்துவிட முடியும் என்பது முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் கூறியுள்ளார். எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரியை உடனே மாற்றவேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக‌‌‌ நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு, நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, ஏற்கப்படுவதாக கூறி, பின்பு மீண்டும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறாக பல்வேறு திருப்பங்கள் ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close