[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

பாஜக கோட்டையில் பிரம்மாண்ட கூட்டம்: ஹர்திக் பட்டேல் சூறாவளி பிரச்சாரம்

gujarat-elections-dont-vote-for-bjp-ncp-or-aap-says-hardik-patel-in-surat

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பட்டிதார் சமுதாய தலைவர் ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். 

சூரத் நகரில் நேற்று ஹர்திக் பட்டேல் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் உட்பட ஆயிரக்காணக்கானோர் கலந்து கொண்டனர். பாஜகவின் கோட்டையாக கருதப்படும் சூரத் நகரின் யோகி சவுக் பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடந்தது.

        

கூட்டத்தில் பேசிய ஹர்திக், பாஜக, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். மேலும் எந்தக் கட்சி ஆட்சி அமைக்குமோ அதற்கு வாக்களியுங்கள் என்று கூறினார். பட்டிதார் மக்களுக்கு வேறு வழியில்லை தங்களுக்குதான் வாக்களிப்பார்கள் என்று பாஜக நினைக்கிறது என்றும் விமர்சித்தார்.

        

ஏராளமான இளைஞர்கள் கூடி இருந்த கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஹர்திக், “நான் உங்களுக்கு 5 நிமிடங்கள் கொடுக்கிறேன். உங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுங்கள்” என்றார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close