[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை மன்னன் ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜூ

this-year-best-comedian-mk-stalin-minister-sellur-raju

இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை மன்னன் ஸ்டாலின் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

தமிழக அரசை விட திமுக சிறப்பாக செயல்படுகிறது என மு.க.ஸ்டாலின் பேசி வருவது சிறந்த ஜோக் எனவும் அரசு தூர்வாரியதால் உயர்ந்த நிலத்தடி நீர்மட்டத்தில் அவர் புகழ் தேட முயற்சிக்கிறார் என்றும் குற்றம்சாட்டினார். 

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், “எதிர்க்கட்சி தலைவர் மிகப்பெரிய ஜோக் அடித்துள்ளார். அவர்கள் தூர் வாரியதால் தான் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாம். தமிழகத்தில் நல்ல மழை பெய்துள்ளது. அதனால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. இதில் ஸ்டாலின் ஆதாயம் தேடுகிறார். அவர்கள் கட்சியில் இருந்து ஏதோ ஒரு இடத்தில் தூர் வாரிவிட்டு, அதில் நிர்நிலை உயர்ந்தால் நிலத்தடி நீர் உயருமா? எங்களை பார்த்து அவர் விஞ்ஞானி என்கிறார். இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை மன்னன் ஸ்டாலின் என்று சொல்லலாமா?” என்று கூறினார். 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close