[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்

if-needed-will-join-hands-with-bjp

நிர்வாக ரீதியாக தமிழகத்துக்குத் தேவைப்பட்டால் பாரதிய ஜனதா கட்சியுடனும் கைகோர்க்கத் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், அரசியலில் தீண்டாமை என்ற ஒன்று இல்லை என்று தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் வலதுசாரி கொள்கைகள் தனக்கு அதிருப்தி அளிப்பதாகக் கூறிய கமல்ஹாசன், குறைந்தபட்ச செயல் திட்டம் உருவானால், அக்கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் தனக்கு தயக்கம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ள கமல், இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடும் முடிவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கவில்லை என்றும், நிதானமாக யோசித்தே எடுத்திருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close