[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

டிரைவிங் லைசென்ஸை ஆதார் எண்ணுடன் இணைக்க தயாராகுங்கள்...!

we-are-planning-to-link-driving-licence-to-aadhaar-union-minister-ravi-shankar-prasad

ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க திட்டமிட்டு வருவதாக மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் ஹரியானா மாநாடு-2017 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரவிசங்கர் பிரசாத் இதனைக் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய ரவிசங்கர் பிரசாத், “ஓட்டுநர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைக்க திட்டமிட்டு வருகிறோம். இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி உடன் பேசியுள்ளேன். பான் கார்டு மற்று வங்கி கணக்குகளுடன், ஆதார் எண்ணை இணைத்தது பண மோசடிகளை தடுப்பதற்காகவே. ஆதார் என்பது டிஜிட்டல் அடையாளம் தான். அங்க அடையாளம் அல்ல.

டிஜிட்டல் அடையாளம் தொழில்நுட்ப உதவியுடன் உடல் அடையாளங்களை உறுதி செய்கிறது. ஆதார் மிகவும் பாதுகாப்பானது. இது சிறந்த அரசங்கம் மற்றும் அதிகாரமளித்தலுக்கு முக்கிய கருவி. டிஜிட்டல் அரசாங்கமானது மிகவும் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படும். தொழில்நுட்ப வசதிகள் மக்களுக்கு கிடைக்கக் கூடியவையில் மலிவாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே ஆதார் எண் பல்வேறு விவகாரங்களுக்கு கட்டாயமக்கப்பட்டு வருவதற்கு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் தற்போது ஓட்டுநர் உரிமத்துடனும் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close