[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

முதலமைச்சருக்கு கட்டுப்படுவோம் : அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம்

we-will-be-in-charge-of-cm-a-resolution-in-aiadmk-meeting

முதலமைச்சர் பழனிசாமி எடுக்கும் முடிவிற்கு அனைவரும் கட்டுப்படுவதாக அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி எடுக்கும் முடிவிற்கு, எம்.எல்.ஏக்கள் அனைவரும் கட்டுப்படுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் புதுச்சேரியில் தங்கியுள்ள தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இருப்பினும் சுமார் 105 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும், அவர்கள் அனைவரும் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close