[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

‘அதிமுகவை சரியவிடாதீர்கள்’: தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

do-not-let-admk-to-fall-down-sasikala-wrote-letter-to-cadres

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய இயக்கம் என்ற இடத்தில் இருக்கும் அதிமுக சிறிதளவும் கீழே இறங்கிவிடக்கூடாது என்று அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும் வாழ்வின் உச்ச நிலையை கடைக்கோடி தொண்டரும் அடைய முடியும் என்பதே ஜெயலலிதா அதிமுகவின் வாயிலாக பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு உயர் பதவிகளை எட்டுவது என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியமாகும் என்றும் சசிகலா கூறியுள்ளார். எத்தனையோ நெருக்கடிகைளைத் தாண்டி இறுதிவரை சிறுபான்மையினரின் நலனை விட்டுக் கொடுக்காத இயக்கமாக அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று எதிரிகளைப் பார்த்து அறைகூவல் விடுத்தவர் ஜெயலலிதா என்று கூறியுள்ள சசிகலா, அதை நிரூபித்துக் காட்ட வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 3-வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுக சிறிதளவும் கீழே இறங்கி விடக்கூடாது என்ற அக்கறையாலேயே தன்னை கட்சிக்கு அர்ப்பணித்துக் கொண்டதாக சசிகலா குறிப்பிட்டுள்ளார். வீழ்ந்தே கிடக்கும் எதிரிகள் எஃகு கோட்டையில் விரிசல் விழாதா, தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் முன்பை விட உறுதியாய் கட்சியையும், தமிழகத்தையும் காத்திட வேண்டும் என எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் சூளுரை ஏற்போம் என்றும் சசிகலா கூறியுள்ளார்.

அதிமுக 3 ஆக பிரிந்ததற்கு பாஜக தான் காரணம் என நேற்று நமது எம்ஜிஆரில் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று சசிகலா கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close