[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது: நடிகர் சங்கம்
 • BREAKING-NEWS மெர்சலில் சில காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தை வைத்து பலர் மோசமான அரசியலை செய்கின்றனர்: தமிழிசை
 • BREAKING-NEWS சென்சார் செய்த படத்தை திரும்ப சென்சார் செய்ய வாய்ப்பில்லை: எஸ்.வி.சேகர்
 • BREAKING-NEWS கருத்து சுதந்திரம் என்பது படைப்பின் அடிப்படை உரிமை: இயக்குநர் சீனு ராமசாமி
 • BREAKING-NEWS மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூக கருத்துகளை சொன்ன விஜய்க்கு பாராட்டு: விஷால்
 • BREAKING-NEWS பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும்: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
 • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
 • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
 • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
அரசியல் 10 Aug, 2017 06:23 PM

அறுவைச் சிகிச்சை செய்யவும் தயங்கமாட்டோம்: எடப்பாடி அணிக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை

do-not-hesitate-to-do-surgery-ttv-dhinakaran-warns

நேற்று முளைத்த காளான்களாக, சுயநலத்துக்காக, பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயத்தில் கட்சிக்கும், ஆட்சிக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வேலையை எடப்பாடி பழனிசாமி உட்பட யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும், கட்சி கட்டுக்கோப்பாக இருக்க அறுவை சிகிச்சை செய்யவும் தயங்க மாட்டோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளாரக ஏற்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “பொதுச்செயலாளர் சசிகலாவால் முதலமைச்சர் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி எப்போது தேர்தல் ஆணையர் ஆனார் என்று தெரியவில்லை. அவர்கள் வெளியிட்ட லெட்டர்பேடில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - தலைமை நிலையம் என்று இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கட்சிக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதற்கு பிறகு, ஆர்.கே.நகர் தேர்தலின்போதே அதிமுக என்ற பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்தார்கள். அந்தத் தேர்தல் முடிந்த பிறகும் அதை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று சொன்னார்கள். இது கூடத் தெரியாமல் கட்சிப்பெயரைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்” என்று கூறினார்.

மேலும், “இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறுகின்ற செயல். இதை தேர்தல் ஆணையத்துக்கு எடுத்து சென்றால் இதில் கையெழுத்துப் போட்ட அனைவரும் பதவியிலிருந்து இறங்க வேண்டியிருக்கும். நான் ஏற்கனவே சொன்னதுபோல பதவியில் இருப்பவர்கள் பயத்தில் இருக்கிறார்கள். இப்போது நான் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து கட்சியை பலப்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். பாராளுமன்ற தேர்தலுக்கு தயராக திட்டமிட்டுள்ளேன். கட்சியில் சட்டவிதிகள் தெரிந்தும் தவறாக திரித்துக் கூறுகிறார்கள். ஆனால் ஒன்றை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செய்ததை அவர்கள் சட்டவிதிகளுக்கு உட்பட்டதுதான் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கின்ற சூழலில் பொதுச்செயலாளரால் நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்துப் பொறுப்புகளும் செல்லும் என்பது அனைவருக்கும் தெரியும். ஓ.பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தது சசிகலாதான். அவர் இன்றுவரை ஒவ்வொரு மாதமும் ஊதியம் கொடுப்பது, நலத்திட்ட உதவிகள் செய்வது போன்ற காரியங்களுக்காக காசோலையில் கையெழுத்திட்டு பணப்பரிமாற்றங்கள் செய்துகொண்டுதான் இருக்கிறார். ஜெயலலிதா நியமித்தவர்கள்தான் பதவியில் இருக்க வேண்டும் என்று சொன்னால், ஜெயலலிதா நியமித்த ஓ.பி.எஸ். நீக்கப்பட்ட பிறகு சசிகலா நியமித்த திண்டுக்கல் சீனிவாசன் எப்படி வங்கிப் பரிவர்த்தனைகள் செய்ய முடிகிறது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலாவால் நியக்கப்பட்ட நான் கட்சிப்பணி செய்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆர்.கே.நகர் தேர்தலின்போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் நான் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில்தான் அதிமுக அம்மா அணி என்ற பெயரும், தொப்பி சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. 
நியமனப் பதவிகள் செல்லாது என்பது முற்றிலும் தவறானது. கழகத்தின் பொதுச்செயலாளர், மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் போன்ற பதவிகளுக்கு வருபவர்கள்தான் 5 ஆண்டுகள் கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால் பொதுச்செயலாளர் போடுகின்ற நியமனப் பதவிகளை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது. துணைப் பொதுச்செயலாளர், அவைத் தலைவர், கொள்கைப் பரப்புச் செயலாளர் போன்ற பதவிகள் நியமனம் செய்யப்படும் பதவிகள். அந்த நியமனப் பதவிகள் செல்லும். உதாரணமாக, நாஞ்சில் சம்பத் மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த அன்றைய தினமே அவருக்கு கழகத்தின் கொள்கைப்பரப்பு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார் ஜெயலலிதா. ஆகவே எனக்கு சரியாக செயல்படாத பொறுப்பாளர்களை நீக்கவும், புதிய பொறுப்பாளர்களை நியமிக்கவும் உரிமை உண்டு” என்று டிடிவி தினகரன் கூறினார்.

அதேபோல், “ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணி என்பதெல்லாம் இல்லை. சசிகலா பொதுச்செயலாளராக இருக்கின்ற அம்மா அணி, கட்சியைவிட்டு பிரிந்து சென்ற புரட்சிதலைவி அம்மா அணி என்பதுதான் சரியானது. கட்சியின் வளர்ச்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக பதவியில் இருந்தால்போதும் என்ற எண்ணத்துடன் செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்ற தைரியமும், மனதிடமும், உரிமையும் ஜெயலலிதா வழிவந்த எங்களுக்கு இருக்கிறது. கட்சியைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்யவும் நாங்கள் தயங்கமாட்டோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, என்னை துணைப் பொதுச்செயலாளர் என்று தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரமே கொடுத்துள்ளார். அவர்கள் தேர்தல் ஆணையத்தில் ஒன்று பேசுகிறார்கள். வெளியே வந்து ஒன்று பேசுகிறார்கள். சிலரின் சூழ்ச்சியில் சிக்கிக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்கள்” என்றும் தினகரன் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close