[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் காவல்துறையினர் - ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காளியப்பன் (22) என்பவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உடற்கூறு ஆய்வு தொடங்கியது
  • BREAKING-NEWS எனக்கு உற்சாக வரவேற்பளித்த சகோதர, சதோதரிகளின் துக்கத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன்-கமல்ஹாசன்

டிஐஜி ரூபா ரகசியங்களை வெளியிடுகிறார்: புகழேந்தி குற்றச்சாட்டு

dig-roopa-releases-the-secrets-pugazhenthi-complaint

டிஐஜி ரூபா சட்டத்திற்குப் புறம்பாக அலுவல் ரகசியங்களை வெளியே பரப்புவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கர்நாடக அரசிடம் கடிதம் அளித்திருக்கிறோம் என அதிமுக அம்மா அணியின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி குற்றம் சாட்டினார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சட்டத்திற்கு புறம்பாக அலுவல் ரகசியங்களை டிஐஜி ரூபா பரப்பி வருகிறார். தினந்தோறும் ஊடகங்களையும், பத்திரிக்கைகளையும் தொடர்பு கொண்டு சசிகலா மீது அவதூறு பரப்பி வருகிறார். பொறுப்பில் இருக்கும் அதிகாரி அலுவல் ரகசியங்களை வெளியே பரப்புவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசிடம் கடிதம் அளித்திருக்கிறோம். பொறுப்பில் இருப்பவர்கள் அலுவல் ரகசியங்களை வெளியே கூறுவது சட்டப்படி தவறு. சசிகலாவின் பெயருக்கு ரூபா களங்கம் ஏற்படுத்துவதை ரூபா நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார். 
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close