[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை இன்று மாலை திறந்து வைக்கிறார் முதல்வர்!

mgr-is-the-chief-minister-who-opened-the-statues-of-jayalalithaa-this-evening

திருவண்ணாமலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று மாலை கொண்டாடப்படுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வாக மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் புகைப்படக் கண்காட்சி இன்று தொடக்கி வைக்கப்பட்டது. கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடக்கி வைத்தார். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்க நாளை மறுநாள் சிறப்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். மேலும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு, விபத்துக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும் கூறினார். இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை திறந்துவைக்க உள்ளார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close