[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

உரிமைகளை பறிப்பதா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

vaiko-condemned-to-central-government

கால்நடைகளை இறைச்சிக்காக விற்கக்கூடாது என்று பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்திருக்கும் சட்டம் இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் அமைந்திருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மாட்டிறைச்சி சந்தையில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியாதான் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். பாரதிய ஜனதா அரசின் நடவடிக்கையால் நாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறைச்சி சந்தை பாதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 
நடைமுறை சாத்தியமற்ற கடுமையான விதிமுறைகள் மூலம் கால்நடைகள் விற்பனை செய்வதையே தடை செய்யவேண்டும் என்று மத்திய அரசு முடிவுக்கு வந்திருப்பதைத்தான் இவை காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கை சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைகளை பறிப்பதும், சிறு தெய்வங்கள், நாட்டார் கோவில் வழிபாடுகளில் முக்கிய இடம் பெறும் பலியிடுதலை தடுக்க முயற்சிப்பதும் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை பாரதிய ஜனதா அரசு உணரவேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close