[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

அதிமுக, திமுக-விற்கு மாற்றாக புதிய ஆட்சி அமைய வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

sarath-kumar-demand-new-ruling-against-dmk-and-admk

அதிமுக, திமுகவிற்கு மாற்றாக தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியி‌ன் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான நேர்காணல் தொடங்கியுள்ளது. கொங்கு மண்டல மாவ‌ட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற இந்த நேர்காணலில், கட்சித் தலைவர் சரத்குமார் பல்வேறு கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிக, பாமக இடம் பெற வேண்டும் என்று தெரிவித்தார். தொகுதிப் பங்கீடு குறித்து பாரதிய ஜனதாவுடன் சில நாட்கள் கழித்து பேசப்படும்‌ என்று தெரிவித்த சரத்குமார், அதிமுக, திமுகவிற்கு மாறாக புதிய ஆட்சி அமைய வேண்டும் என்றும் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close