[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

தமிழக விவசாயிகளின் கோரிக்கை நிராகரிப்பு: தண்ணீர் திறந்துவிட இயலாது என சித்தராமையா கைவிரிப்பு

could-not-open-water-from-cauvery-karnataka-chief-minister-siddaramaiah

மனிதாபிமான அடிப்படையில் காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக விவசாயிகள் விடுத்த கோரிக்கையை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நிராகரித்துள்ளார்.

சம்பா சாகுபடிக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், தமிழக விவசாயிகள் இருபது பேர் கொண்ட குழு சித்தராமையாவை சந்திக்க சென்றனர்.

பெங்களூருவிலுள்ள அவரது இல்லத்தில், தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் விவசாயிகளின் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழக விவசாயிகளின் மனுவை பெற்றுக்கொண்ட சித்தராமையா, போதிய மழை பெய்யாததால் கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததாக தெரிகிறது. மழை பெய்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் அவர் கூறி்யுள்ளார்.

மேலும், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்தால் மட்டுமே தங்களின் வாழ்வாதாரத்தை காக்க முடியும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தியதை அடுத்து, அது தொடபாக பரிசீலிப்பதாக சித்தராமையா தெரிவித்துள்ளதாக விவசாயிகள் க‌றியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close