[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

normal-life-hit-as-transport-unions-in-karnataka-strike-work

கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், கர்நாடக அரசு பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் மாநிலத்திற்குள் காவல்துறையினர் பாதுகாப்புடன் 8 ஆயிரம் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி ஒரு லட்சத்து 25 ஆயிரம் கர்நாடக போக்குவரத்து ஊழியர்கள் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், 23,000 பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இதனை பயன்படுத்தி, ஆட்டோக்கள், கால் டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close