மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா பட்டோலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நீண்ட அரசியல் குழப்பத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த 28ஆம் தேதி மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றார். உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நேற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்நிலையில் இன்று மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நானா பட்டோலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நானா பட்டோலே போட்டியின்றி ஒருமனதாக தேர்வாகி உள்ளார். பாஜக சார்பில் கிஷன் காத்தோர் சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். எனினும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நானா பட்டோலேவிற்கு ஆதரவு தர தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நானா பட்டோலே சபாநாயகராக பதவியேற்றார்.
இதையும் படிக்கலாமே: பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!