மகாராஷ்டிரா முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்திருந்த நிலையில், பட்னாவிஸும் ராஜினாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஃபட்னாவிஸ், “மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு தான் அதிக பெரும்பான்மை இடங்கள் கிடைத்தது. இந்தக் கூட்டணியில் 70 சதவிகித இடங்களை பாஜக வெற்றிப் பெற்று இருந்தது. ஆகவே இது பாஜகவிற்கு மக்கள் அளித்த வெற்றியாகவே இருந்தது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து சிவசேனா பேரம் பேச ஆரம்பித்தது. சிவசேனா பாஜகவை மிரட்டியது. சிவசேனாவுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் அளவு பாஜகவுக்கு இடங்கள் இல்லை என தெரிந்த பின் சிவசேனா முதல்வர் பதவி கேட்டது. சிவசேனா பொய் சொல்கிறது.
சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தினர். சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் மூன்றும் வெவ்வேறு கொள்கைகளை கொண்ட கட்சிகள். அந்த நேரத்தில் அஜித் பவார் எங்களுக்கு உதவுவதாக கூறினார். அஜித் பவார் தான் என்சிபியின் சட்டமன்ற குழுத் தலைவர். அதனால், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் அஜித் பவாரிடம் இருப்பதாக நினைத்தோம்.
அவருடன் பேசிய பிறகு நாங்கள் ஆட்சி அமைத்தோம். எனினும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கூட்டணியில் இதற்குமேல் தொடர விருப்பமில்லை என்று அஜித் பவார் என்னிடம் சொன்னார். அவர் ராஜினாமா செய்த பிறகு எங்களிடம் ஆட்சியமைக்க போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லை. ஆகவே நான் ராஜினாமா செய்ய உள்ளேன். இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு பின் என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்க உள்ளேன்.
தற்போது அமைந்துள்ள சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையேயான கூட்டணி மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியை தரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. நாங்கள் எந்தவித குதிரை பேரத்திலும் ஈடுபட மாட்டோம். சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம்” என்று கூறினார்.
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!