[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

''கவுதம் கம்பீரை காணவில்லை'' - டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

missing-posters-of-gambhir-put-up-after-he-skips-meeting-on-air-pollution

டெல்லி ஐடிஓ பகுதியில் கவுதம் கம்பீரை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன

சுவாசிக்கும் தரத்தை காற்று இழந்துவிட்டது. மற்ற வட மாநிலங்களிலும் காற்று மாசு நிலவியே வருகிறது. தீபாவளி பண்டிகை, ஹரியானா விவசாயிகள் ஏற்படுத்திய புகை எல்லாம் இணைந்து காற்று மாசை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. காற்று மாசினால் பாதிக்கப்படாமல் இருக்க, பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து நடமாடி வருகின்றனர். 

இந்நிலையில் காற்று மாசு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டம் கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 29 எம்பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் வெறும் 4பேர் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிகிறது. டெல்லி மாசு குறித்து கெஜ்ரிவால் அரசை கடுமையாக விமர்சனம் செய்த எம்பி கவுதம் கம்பீரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் கவுதம் கம்பீர், வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தார். 

மக்கள் பிரச்னை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்காமல் கவுதம் கம்பீர் பொழுதுபோக்கு விளையாட்டில் கவனம் செலுத்துவது கண்டனத்துக்குரியது என பலரும் விமர்சனம் செய்தனர். கவுதம் கம்பீருக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக்குகள் பதிவிடப்பட்டன. 

இந்நிலையில், டெல்லி ஐடிஓ பகுதியில்  கவுதம் கம்பீரை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ''இவரை காணவில்லை. யாரேனும் பார்த்திருக்கீர்களா?''என்ற வாசகத்துடன் கவுதம் கம்பீரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close