[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக 50 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை
  • BREAKING-NEWS ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் 22-ஆம் தேதி வரை வெளியிட தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்

''அடுத்தவர்களின் பணத்தால் திருப்தி அடைய முடியாது'' - ஹீரோவான முதியவர் தனஜி!

maha-man-returns-rs-40k-with-only-rs-3-in-his-pocket

பணம் தான் அத்தியாவசியம். பணம் தான் நோக்கம் என ஓடிக்கொண்டிருக்கும் காலகட்டமாகவே இது இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 'இது வெறும் பணம். அவ்வளவுதான்' என சொல்லாமல் சொல்லியுள்ளார். மகாராஷ்டிராவிலும், சமூக வலைதளங்களிலும் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் 54 வயதான தனஜி ஜக்டேல். 

மகாராஷ்டிராவைச் சேர்ந்த தனஜி தீபாவளிக்காக தன் ஊருக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அவர் பக்கத்தில் ஒரு பை கிடந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்துள்ளார் தனஜி. உள்ளே ரூ.40 ஆயிரம் பணம் இருந்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த சிலரிடம் பணம் குறித்து விசாரித்துள்ளார். 

அப்போது பதட்டத்துடன் பணத்தை தேடிக்கொண்டு இருந்த ஒரு நபரிடம் சென்று விசாரித்த தனஜி, பணத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பவும் பேருந்துக்காக காத்திருந்தார். இவ்வளவு நேர்மையான மனிதருக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டுமென யோசித்த பணத்தை தவறவிட்ட நபர், தனஜியிடம் 1000 ரூபாயை வெகுமதியாக கொடுத்துள்ளார்.

அதனை ஏற்க மறுத்த தனஜி, ''நான் ஊருக்கு செல்வதற்கு பேருந்துக்கட்டணம் 10 ரூபாய். என்னிடம் 3 ரூபாய் தான் இருக்கிறது. வேண்டுமானால் 7 ரூபாய் கொடுங்கள். நான் ஊருக்கு சென்றுவிடுவேன்'' என கூறியுள்ளார். இப்படிப்பட்ட பதிலை கொஞ்சமும் எதிர்பாராத பணத்தை தவறவிட்ட நபர் அவருக்கு ரூ.7 கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

தனஜியின் நேர்மை அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. சதாரா எம்எல்ஏ, முன்னாள் எம்பி என பலரும் தனஜியை நேரில் சென்று பாராட்டியுள்ளனர். மேலும் பலர் அவருக்கு வெகுமதி கொடுக்க முயற்சி செய்துள்ளனர். பாராட்டுகளை தவிர வேறு எதையும் தனஜி ஏற்கவில்லை.

தனஜியின் நேர்மையால் நெகிழ்ந்துபோன அமெரிக்காவில் வசித்து வரும் உள்ளூர்க்காரர் ஒருவர், அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு கொடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். வழக்கம் போல் வெகுமதி எனக்கு வேண்டாமென கடந்து சென்றுவிட்டார் தனஜி.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதியவர் தனஜி '' அடுத்தவர்களின் பணத்தால் யாரும் திருப்தி அடைய முடியாது. ஒரு கருத்தைத் தான் நான் சொல்ல விரும்புகிறேன். அது, ''அனைவரும் நேர்மையாக இருங்கள்’’ என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close