அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் சாம்சங் போன் ஆர்டர் செய்தவருக்கு கற்கள் மட்டும் வந்து சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தின் வடக்கு மால்டா பகுதியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் காஜென் முர்மு. இவர் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் அமேசானில் போன் ஆர்டர் செய்து ஏமாந்துவிட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதில், “எனது மகன் அமேசான் மூலம் சாம்சங் போனை ஆர்டர் செய்தார். டெலிவரியான பாக்ஸை நாங்கள் பிரித்து பார்த்தபோது, உள்ளே ரெட்மி 5ஏ போனின் பாக்ஸ் இருந்தது. அதைப்பிரித்து பார்த்தபோது உள்ளே கற்கள் இருந்தன” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாள்தோறும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் பொருட்களை வாங்குவது குறிப்பிடத்தக்கது.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்