மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில், இரு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சியை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த 21ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 235 பெண்கள் உள்பட 3,237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆளும் பாஜகவும், சிவசேனாவும் ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் களமிறங்கின.
பாஜக152 இடங்களிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், காங்கிரஸ் - 145 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் - 123 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமாக 60 புள்ளி எட்டு மூன்று சதவிகித வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
இதேபோல் 90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்டமன்றத்திற்கும் கடந்த திங்களன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், கைப்பற்ற காங்கிரசும் முனைப்பு காட்டுகின்றன.
முந்தைய தேர்தலில் 19 இடங்களை வென்ற இந்திய தேசிய லோக் தளம் கட்சியும் முக்கிய போட்டியாளராக களத்தில் உள்ளந. மொத்தம் 105 பெண்கள் உள்பட ஆயிரத்து 169 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். தேர்தலில் 68 புள்ளி நான்கு ஏழு சதவிகித வாக்குகள் பதிவாகின. ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில்வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
என்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு
5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு