[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

 “ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்

maharashtra-assembly-elections-2019

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி ஈடுபடுவதால் அங்கு பாஜக வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி என உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

வரும் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் சந்திக்கும் மகாராஷ்ட்ராவில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். 

மகாராஷ்டிராவின் உமர்கேட்டில் பாஜக வேட்பாளர் நமதேவ் சசானேவை ஆதரித்து யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேரணியில் பேசிய அவர், “பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பிரதமர் மோடி உறுதி கொண்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ‘ஒரு இந்தியா, உயர்ந்த இந்தியா’ என்ற கருத்தை நிறுவியுள்ளனர். 

ராகுல் காந்தி எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அது தோல்வியடையும். காங்கிரஸ் கட்சியை ஆதரித்து ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி. விவசாயிகளின் நலனுக்காக விரைவான திட்டங்களை கொண்டுவர பாஜகவுக்கு வாக்களியுங்கள்.” எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close