[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

“185 மருத்துவ சீட்டிற்கு 100 கோடி வசூல்” - கர்நாடக சோதனை குறித்து வருமான வரித்துறை

the-income-tax-department-has-seized-about-rs-5-crore-cash-during-raids-against-former-karnataka-deputy-chief-minister-g-parameshwara-and-others-officials-said-friday

கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர் பரமேஸ்வரா. காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜி.பரமேஸ்வராவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றும், நேற்று முன்தினமும் சோதனை நடத்தினர். குறிப்பாக அவருக்கு தொடர்புடைய ஸ்ரீசித்தார்த்தா உயர்கல்வி டிரஸ்ட் நடத்தும் சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி, அவரது வீடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. மருத்துவ தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் பல கோடி வருவான வரி ஏய்ப்பு செய்த புகாரில் பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற இடங்களில், பரமேஸ்வராவின் சகோதரர் மகன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. சித்தார்த்தா அகடமியின் வேந்தராக பரமேஸ்வரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

          

இந்த சோதனையில் பரமேஸ்வராவிற்கு தொடர்புடைய இடங்களில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய்க்கு மேல் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பரமேஸ்வரா மற்றும் முன்னாள் எம்பி ஆர்.எல்.ஜலப்பா ஆகியோருக்கு தொடர்புடைய  சுமார் 300 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் இது கர்நாடகாவையே திரும்பி பார்க்க வைத்தது.

இந்நிலையில், இரண்டு நாட்களாக நடைபெற்ற சோதனைகள் குறித்து வருமானவரித்துறை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “அக்டோபர் 9 ஆம் தேதி கர்நாடகாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், மருத்துவ ஆலோசனைக் குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட மெரீட் இடங்கள், நிறுவனத்தின் இடங்களாக மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

         

இடைத்தரகர்கள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு எம்பிபிஎஸ், பிஜி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் இந்த சோதனையின் போது சிக்கியுள்ளன. இதற்காக ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கணக்கில் வராத ரூ4.22 கோடி சிக்கியுள்ளது. இதில், ரூ89 லட்சம் முக்கிய டிரஸ்டியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது. 

ரியல் எஸ்டேட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதையும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் கணக்கில் வராத ரொக்கமாக ரூ100 கோடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பணம் சுமார் 185 பேரிடம் இருந்து ஒரு மருத்துவ சீட்டிற்கு தலா ரூ50 லட்சம் முதல் 60 லட்சம் வரை பெற்றுக் கொண்டதாகும். மொத்தத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.8.82 கோடி. விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close