[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

p-chidambaram-bail-plea-in-inx-media-case-sc-to-hear-matter-next-on-october-15

உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார்.‌ திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ‌வரது நீதிமன்ற‌க் காவலை வரும் 17-ம் தேதி‌வரை நீட்டித்து‌ டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது‌. இதனிடையே அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் ஜாமீன் மனு மீதான விசாரணையை  அக்டோபர் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close