[X] Close
NEWS
Puthiyathalaimurai-logo
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மது வாங்குவதற்கு மட்டும் தான் வயது குடிப்பதற்கு அல்ல - டெல்லி உயர்நீதிமன்றம்

minimum-age-limit-for-purchasing-liqour-not-applicable-to-drinking-delhi-hc

மது வாங்குவதற்கு மட்டுமே வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, குடிப்பதற்கு வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒருவர் டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23ஐ எதிர்த்து வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். இந்த மனுவில், “டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23-ன்படி டெல்லியில் ஒருவர் மது வாங்கவும் குடிக்கவும் 25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கில் மனுதாரரின் வழக்கறிஞர் உத்தரப்பிரதேசம், கோவா, தெலங்கானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மது குடிப்பதற்கு 21 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வாதாடினார். 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “மனுதாரர் டெல்லி கலால் சட்டத்தின் பிரிவு 23-ஐ தவறாக புரிந்து கொண்டுள்ளார். ஏனென்றால் இந்தச் சட்டத்தில் மது வாங்குவதற்கு மட்டும் தான்  25 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மது குடிப்பதற்கு வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆகவே இந்தப் பிரிவில் எந்தவித தவறும் இல்லை. எனவே இந்தப் பிரிவு நாங்கள் நீக்க தேவையில்லை” என்று கூறினர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close