[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு

வீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்ட சிறுத்தை தோல் - 6 பேர் கைது

odisha-leopard-skin-seized-six-arrested

வீட்டினுள் சிறுத்தை தோலை பதுக்கி வைத்திருந்த 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலம், சாதிபராகதா கிராத்தில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சட்டவிரோதமாக விலங்குகளில் தோல்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ 2 லட்சம் மதிப்புள்ள சிறுத்தை தோலை வனத்துறையினர் கைப்பற்றினர். 

இது தொடர்பாக சத்யரணியன், பிம்பாதர், ராஜேஷ், தபேந்திரா, சநாதன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைப்பற்றப்பட்ட சிறுத்தை தோல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தாகவும், இன்னும் பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட உள்ளதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் வனவிலங்குகளின் தோல்கள் விற்பனை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் வனத்துறை கூறியுள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close