[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வங்கி அதிகாரிகளின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு 

bank-strike-postponed

கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தற்போதுள்ள 27 பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்து 12 வங்கிகளாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. மேலும் 5 நாள் வேலை, வரைமுறையற்ற வேலை நேரத்தை முறைப்படுத்த கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close