[X] Close
JUST IN
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
  • BREAKING-NEWS “நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”- தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

டிக்டாக் மோகம்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

youth-drowns-while-shooting-tik-tok-video-in-bheemgal-check-dam

தெலங்கானாவில் டிக் டாக் மோகத்தால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் 2 நாட்களுக்குப் பி‌றகு மீட்கப்பட்டது. 

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது நண்பர்கள் கங்காஜலம், மனோஜ் ஆகியோருடன்  அருகிலுள்ள கப்பலவாகு தடுப்பணை பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்றனர். அங்கு மீன் பிடித்தபடி குளித்துக்கொண்டிருந்த அவர்கள் டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்து கொண்டிருந் தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை கரையோரத்தில் இருந்து கவனித்த கிராமத்தினர், கங்காஜலம், மனோஜ் ஆகியோரை மீட்டனர். தினேஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக தேடி வந்த நிலையில் இன்று அவர் உடல் மீட்கப்பட்டது. 

டிக் டாக் மோகத்தால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close