[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

“சிலைகளை சிதைப்பது கண்டனத்துக்குரியது” - ஸ்டாலின் அறிக்கை  

dmk-chief-stalin-condemn-to-ambedkar-statue-damaged

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஒருவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் அந்த காரை தீயிட்டுக் கொளுத்தினர். தீயிட்டு கொளுத்திய கும்பல் மீது ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பு பேருந்து நிலையம் அருகே இருந்த அம்பேத்கர் சிலையை உடைத்தது. இதனால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவியது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில்  சிலை உடைக்கப்பட்ட அதே இடத்தில் இன்று காலை புதிய சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

''அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலையை வேதாரண்யத்தில் வஞ்சக நெஞ்சம் கொண்ட வன்முறையாளர் சிலர் சிதைத்த செயல் கண்டனத்துக்குரியது. தமிழகம் முழுவதும் இத்தகைய சக்திகளை வேரறுத்திட அதிமுக அரசு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். 

சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் இத்தகைய போக்குகளை அரசும் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக அடக்கி ஒடுக்கி அப்புறப்படுத்த வேண்டும். ஜனநாயக அரசியல் முகமூடி அணிந்த பாசிச சக்திகளின் விஷ விதைகள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் சிலைகளை சிதைப்பது கடும் கண்டனத்துக்குரியது” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close