[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

delhi-high-court-dismisses-both-anticipatory-bail-pleas-of-former-union-finance-minister-p-chidambaram-in-connection-with-inx-media-case

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்ந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் இதன் மீதான உத்தரவை பிறப்பிக்காமல் கடந்த ஜனவரி 25ம் தேதி வழக்கை ஒத்திவைத்தது. இந்த மனு மீதான வாதங்களின்போது, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடத்திய விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என இரண்டு அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன. 

கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றது. இந்த வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

இந்த நிலையில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. ப.சிதம்பரம் தரப்பிற்கு மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close