[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

இரண்டு அவித்த முட்டைகளுக்கு 1700 ரூபாய் பில் - ஆடிபோன வாடிக்கையாளர் 

forget-rs-442-bananas-this-mumbai-hotel-charged-their-guest-rs-1-700-for-2-boiled-eggs

மும்பையில் ஒருவர் 2 அவித்த முட்டைகளை வாங்கியதற்கு ஓட்டலில் 1700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் சண்டீகரில் ஒரு ஓட்டலில் பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் 2 வாழைப்பழம் வாங்கியதற்கு அந்த ஓட்டல் 442 ரூபாய் கட்டணம் வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு கலால் வரித்துறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. 

இந்நிலையில் இப்போது மும்பையிலுள்ள ஒரு ஓட்டலில் ஒருவர் இரண்டு அவித்த முட்டைகளை வாங்கியுள்ளார். அதற்கு 1700 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கார்த்திக் தர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் இந்த ஓட்டலில் வழங்கப்பட்ட ரசீதை பதிவிட்டுள்ளார். அதில் 2 அவித்த முட்டைகள் மற்றும் 2 ஆம்லெட்களுக்கு கட்டணமாக தலா 1700 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் கிண்டலாக இந்தக் கோழி மிகவும் பணக்கார கோழியாக இருக்கும் போல என்று பதிவிட்டுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close