[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கேரள வெள்ளச் சேதப் பகுதிகளை நாளை பார்வையிடுகிறார் ராகுல் காந்தி

rahul-gandhi-to-visit-kerala-on-sunday

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை பார்வையிடுகிறார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், பொதுமக்களை தங்க வைக்க ஆயிரத்து இரண்டு தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள

தற்காலிக முகாம்களில் 29 ஆயிரத்து 997 குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 8 ஆயிரத்து 138 பேர் தங்கவைக்‌கப்பட்டுள்ளனர். மலப்புரம், வயநாடு பகுதிகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தைவிட இந்தாண்டு பாதிப்பு அதிகமென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளா முழுவதும் மழைக்கு 42 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


வயநாடு, மலப்புரம் பகுதிகளில் ஏற்படுள்ள வெள்ளச் சேதங்களை காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி நாளை பார்வையிடுகிறார். இத்தகவலை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close