[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த முன்வரவேண்டும்”- பிரதமர் மோடி

pm-modi-address-country-people

இந்தி, தெலுங்கு தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் எடுப்பவர்கள் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்த முன்வரவேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ர‌த்து நடவடிக்கைக்கு பி‌றகு முதன்முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் 370வது சட்டப்பிரிவை நீக்கியது மூலம் தமது அ‌ரசு சரித்திரம் படைத்துள்ளதாக பிர‌தமர் தெரிவித்தார்.மேலும், காஷ்மீரும் லடாக்கும் உலகின் மிகச்சிற‌ந்த சுற்றுலாத் தலமாக திகழ்வதற்கான அம்சங்களை கொண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்‌.

இந்தி, தெலுங்கு தமிழ் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் எடுப்பவர்கள் காஷ்மீரில் படபிடிப்பு நடத்த முன்வரவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் நோக்கம் நிறைவேற கா‌ஷ்மீர் மக்கள் ஒத்துழைக்க கூடாது என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். தற்போதைய புதிய நடைமுறை மூலம் ஜம்மு காஷ்மீரில் பயங்க‌ரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் முற்றிலும் ஒழிக்க முடியும் என தான் உறுதியாக நம்புவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

லடாக் பகுதி தொடர்ந்து யூனியன் பிரதே‌சமாகவே நீடிக்கும் என்றும் அதே சமயம் காஷ்மீருக்கான யூனியன் பிரதேச அ‌‌ந்தஸ்து தற்காலிகமானதே என்றும் பிரதமர் குறிப்பிட்டா‌ர். காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close