[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

சொத்து தகராறில் பெண் உட்பட 3 பேர் படுகொலை

andrapradesh-women-including-3-dead-in-family-fued

ஹைதராபாத்தில் சொத்து தகராறு காரணமாக பெண் உட்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அக்ரஹரம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு.இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த போஸ் குடும்பத்தினருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு வந்துள்ளது.இந்நிலையில் போஸ் நேற்று பக்கத்துக்கு கிராமத்திற்கு சென்று பயிர் கடன் தள்ளுபடி ஆவணங்களை வாங்க சென்றுவிட்டு திரும்ப தனது ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பாபுவும், போஸும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். அப்போது இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட கிராமமக்கள் அவர்கள் இருவரையும், சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை போஸ் தனது தந்தையுடன் பாபு வீட்டிற்கு சென்று கோடாரியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக்கண்ட பாபுவின் உறவினர் அவர்களை தடுக்க சென்றபோது அவரையும் தாக்கினர்.அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்த பாபுவின் மனைவி சுசீலா வெளிய வந்தார் அவளையும் கொலை வெறியுடன் தாக்கி உள்ளனர்.இதில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தப்பி ஓடிய போஸ் மற்றும் அவரது தந்தை இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close