[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு பிரிட்டன், ஜெர்மன் அறிவுறுத்தல்

uk-germany-australia-issue-travel-advisory-to-citizens-over-kashmir-terror-alert

ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்கும்படி ஜெர்மன் அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரிலிருந்து வெளியேற அம்மாநில அரசு நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியானது. ஜம்மு-காஷ்மீரில் 25 ஆயிரத்துக்கும் மேலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உடனே அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேறவும் அறிவுறுத்தப்பட்டது. பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. காஷ்மீரில் ஊடுருவ முயன்றதாக ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்வதை தவிர்க்கும்படி ஜெர்மன் அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்ல வேண்டாம் என பிரிட்டன், ஆஸ்திரேலிய அரசுகள் அறிவித்திருந்தன. சுற்றுலாப் பயணிகள் வெளியேறுமாறு காஷ்மீர் அரசு அறிவித்ததை அடுத்து ஜெர்மன், பிரிட்டன் அரசுகள் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close