[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

வேட்டைத்தடுப்புக்காக விருது பெற்ற நாய்!

quarmy-the-dog-bags-honour-for-taking-on-hunters

அசாம் உயிரியல் பூங்காவில் வேட்டைத்தடுப்பு குறித்த ரோந்துப் பணிகளில் தீரத்துடன் செயல்பட்டதாக ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ஒன்று விருது பெற்றுள்ளது.

அசாமில் உள்ள காஸிரங்கா உயிரியல் பூங்காவில் அத்துமீறி நுழையும் வேட்டைக்காரர்களால், புலிகள், காண்டாமிருகங்கள் போன்றவை சுட்டுக் கொல்லப்படுகின்றன. இவற்றைத் தடுக்க ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புக்குழுவில், குவாமி என்ற என்ற ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயும் இடம்பெற்றுள்ளது. 2‌017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இப்பணிகளில் ஈடுபட்டுள்ள குவாமி நாய், பிஸ்வநாத் என்ற பகுதி முழுவதும் ரோந்துப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு மட்டும் கொம்புகளுக்காக 12 காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட இருந்ததை தடுத்துள்ளது. புலிகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் பணிகளிலும் குவாமி நாய் பெரும் பங்காற்றி வருகிறது. இந்த பங்களிப்புக்காக சர்வதேச புலிகள் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற விழாவில் விருது பெற்றுள்ளது குவாமி நாய். 

குவாமியின் சாசகங்களை பறைசாற்றும் வகையில் உயிரியல் பூங்கா சார்பில், பிரத்யேக பேஸ்புக் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ராணுவ வீரரின் செயல்பாடுகளில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு செயல்படுவதாகக் கருதப்பட்டு, குவார்ட்டர் ஆஃப் ஆர்மி என்ற பொருளில் இதற்கு குவாமி என்று பெயரிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close