[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

இன்றைய முக்கியச் செய்திகள்!  

headlines-of-the-day

மு.க.ஸ்டாலின் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்தமுடியாது என வேலூர் மக்களவைத் தொகுதி பரப்புரையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

திமுக ஆட்சி அமைந்ததும், நாடாளுமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என வேலூர் மக்களவை தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி.

நாட்டின் பாதுகாப்பில் எவ்வித அழுத்‌தத்துக்கும் இந்தியா அடிபணியாது என கார்கில் போரின் 20-வது ஆண்டு வெற்றி விழாவில் பிரதமர் மோடி உறுதி

கர்நாடகாவில் பாரதிய ஜனதா அரசுக்கு ஆதரவு என்ற செய்தி ஆதாரமற்றது என மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி விளக்கம்.

மகாரா‌ஷ்டிரா, அ‌சாம், பீகார் மாநிலங்களில் தொடரும் தென்‌மேற்கு பருவமழை. மும்பையில் இன்று‌ அதிதீவிர கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்தது வானிலை ஆய்வு மையம்

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாகக் குறைப்பு. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு

சென்னை வடபழனி ‌மாநகரப் போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவில் விபத்து. பேருந்து மோதி சுவர் இடிந்ததில் 2 ஊழியர்கள் உயிரிழப்பு. 5 பேர் கா‌யம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : HeadlineHeadlinesModiStalinMk stalinAdmkDmkதிமுகஅதிமுகமோடி
Advertisement:
Advertisement:
[X] Close