மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுதிட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தகவல் புதிய தலைமுறை சேகரித்த ஆவணங்களில் கிடைத்துள்ளது.
மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கையில் சில குளறுபடிகள் இருந்ததால் கடந்த ஆண்டு அதனை ஏற்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மறுத்திருந்தது. இந்நிலையில், வரைவு அறிக்கையை மீண்டும் தயாரித்த கர்நாடக அரசு அதனை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு மீண்டும் ஒப்புதலுக்காக சமர்ப்பித்தது.
மேலும், மேகதாது அணைக்கான திட்ட வரைவு அனுமதியை வழங்குமாறு கடந்த ஜூன் 20-ஆம் தேதி சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. இந்தக் கடிதத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டிருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்தது. கடந்த 19-ஆம் தேதி, இத்திட்டத்திற்கான அனுமதி வழங்குவது தொடர்பான நிபுணர் மதிப்பீட்டு குழுக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் விவாதிக்கப்பட்டது.
இந்த நிபுணர் மதிப்பீட்டுக் குழு கர்நாடக அரசுக்கு சாதகமாக அறிக்கை கொடுக்கும் பட்சத்தில் மேகதாது அணைக்கு பெரிய தடை நீங்கி வீடும் எனத் தெரிகிறது. இருப்பினும், வனப்பகுதி போன்ற இடங்களுக்கான அனுமதி பெற கர்நாடக அரசு இன்னும் விண்ணப்பிக்கவில்லை என்பது புதிய தலைமுறை வாயிலாக தகவல் கிடைத்துள்ளது.
அசத்திய ரிஷப், ஸ்ரேயாஸ் ஜோடி - இந்திய அணி 287 ரன் குவிப்பு
“எதிரிக்கும் உதவி செய்” - ‘அன்புதான் தமிழ்’ என்ற அமைப்பை தொடங்கினார் லாரன்ஸ்
பழைய 500 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த மூதாட்டிகளுள் ஒருவர் புற்றுநோயால் உயிரிழப்பு
“தேர்தலில் நிற்க சாதிதான் தகுதியா?” - பொதுத் தொகுதிகளில் பட்டியலின மக்கள் போட்டியிடுவது சாத்தியமா?
4 மாத கர்ப்பிணிப் பெண் தற்கொலை - “மாப்பிள்ளை வீட்டார் கொன்றுவிட்டார்கள்” என புகார்