[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

கர்நாடகாவில் நாளை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

karnataka-congress-legislature-party-meeting-called-at-taj-hotel-in-bengaluru-tomorrow

பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது

கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் இருமுறை கெடு விதித்தும், அதை ஆளும் மதசார்பற்ற ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு புறக்கணித்து விட்டது. இதனால், அம்மாநிலத்தில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. 

சட்டமன்ற விவாதத்தின் போது ஆளுங்கட்சியினர் திங்கட்கிழமை வரை விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை காலை 11 வரை ஒத்திவைத்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். 

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.  கர்நாடக பேரவையில் நாளை மறுநாள் வாக்கெடுப்பு நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close