[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

காணாமல் போன சிறுமியைத் தேடி சென்னையில் முகாமிட்ட பீகார் போலீஸ்

bihar-police-investigate-in-chennai-about-missing-girl-case

காணாமல் போன பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை சென்னையில் முகாமிட்டு பாட்னா காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமியான சஜாதா கதுன். விண்ணப்பம் ஒன்றை பூர்த்தி செய்ய உதவி கோரி, மணிஷா குமாரி என்பவர் வீட்டுக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவே இல்லை. தமது மகளும், மணிஷாவும் ஒரே நேரத்தில் மாயமானதை அறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து, பாட்னா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

குண்டூரில் அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த மணிஷாவிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், பிரகாஷ் யாதவ் என்பவரோடு சிறுமியை அனுப்பியது தெரியவந்துள்ளது.

பிரகாஷ் யாதவ் சென்னை வந்ததை கண்டறிந்த பாட்னா காவல்துறையினர், தமிழக காவல்துறை உதவியை நாடி அவரை பிடித்தனர். விசாரணையில், அன்சாரி என்பவரிடம் சிறுமியை தாம் ஒப்படைத்ததாக கூறியுள்ளார் பிரகாஷ் யாதவ். இதனையடுத்து சென்னையிலேயே தற்போது முகாமிட்டு சிறுமியைத் தேடி வருகின்றனர். சஜாதாவின் பெற்றோரும் சென்னையிலேயே தங்கி மகளை தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close