[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

மேகாலயா சுரங்க விபத்து: மீட்பு பணிகளை நிறுத்திக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

supreme-court-allows-calling-off-rescue-operations-in-meghalaya

மேகாலயாவில் சட்டவிரோத சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை நிறுத்திக்கொள்ள அம்மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. 

மேகாலயாவில் உள்ள கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி சட்டவிரோத சுரங்கத்தில் நிலக்கரி எடுக்க, 15 தொழிலாளர்கள் சென்றனர். மழை வெள்ளம் காரணமாக அருகில் இருந்த லைத்தின் ஆற்றின் தண்ணீர், சுரங்கத்துக் குள் புகுந்தது. இதனால் ’எலி வளை சுரங்கம்’ எனப்படும் சிறிய வாசலை கொண்ட சுரங்கத்துக்குள், நுழைந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, கடற்படை, தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன. 

சுரங்கத்துக்குள் தண்ணீர் வற்றாததால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்த நிலையில் மேலும் இரண்டு பேரின் உடல்கள்  மீட்கப்பட்டன. பின்னர் மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மேகாலயா அரசின் சார்பில் மீட்பு பணியை நிறுத்திக்கொள்ள அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மீட்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. இதனால் மீட்பு பணிகளை நிறுத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து 7 மாதமாக நடந்து வந்த மீட்பு பணி நிறுத்துக்கொள்ளப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close