[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

‘தேஜ் சேனா’ : ஆப் மூலம் அரவணைக்கும் லாலு பிரசாத் மகன்

lalu-yadav-s-son-tej-pratap-announces-tej-sena-for-change-makers-to-launch-tomorrow

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் ‘தேஜ் சேனா’ என்ற புதிய அரசியல் செயலியை தொடங்குகிறார்.

பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேசமயம் பல இடங்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இருப்பினும் லாலு பிரசாத் பிரச்சார களத்தில் இறங்காததுதான் அவர்களின் தோல்விக்கு காரணம் என்றும், அவரது இடத்தை நிரப்ப சரியான நபர் அக்கட்சியில் உருவாகவில்லை எனவும் பேசப்பட்டு வருகிறது.

அதேசமயம் லாலுவின் இடத்தை பிடிப்பதற்கு அவரின் மூத்த மகன் தேஜ் பிரதாப் மற்றும் இளைய மகன் தேஜஸ்வி ஆகியோர் இடையே மறைமுக போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசியலில் தனது கை ஓங்கும் வகையில் இருக்க வேண்டும் என தேஜ் பிரதாப் புதிய செயலி ஒன்றை நாளை தொடங்கவுள்ளார். அந்தச் செயலிக்கு ‘தேஜ் சேனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தச் செயலியை அவர் வெளியிடுகிறார். 

‘மாற்றத்தை விரும்புவோருக்கான தளம்’ என்பதை மையமாக கொண்டு இந்தச் செயலில் தொடங்கப்படுகிறது. அடுத்த லாலு பிரசாத் தேஜஸ்வி தான் என கட்சிக்குள் பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேஜ் பிரதாப் இந்தச் செயலில் ஈடுவதாக தெரிகிறது. இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close