[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல்

triple-talaq-bill-tabled-in-lok-sabha

முத்தலாக் தடுப்பு மசோதா, கடும் அமளிக்கிடையே மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும், முத்தலாக் முறை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவை நீக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால், மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. சமீபத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.

இந்நிலையில், மக்களவையில் அந்த மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதா வை தாக்கல் செய்தார். இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு மசோதா எனப்படும் இந்த மசோதா, கடும் அமளிக்கிடையே இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது அமலில் உள்ள அவசரச் சட்டத்தின் நகலையே மசோதாவாக, மத்திய அரசு தாக்கல் செய்கிறது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எதிர்ப்பு தெரிவித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close