[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
  • BREAKING-NEWS “கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி
  • BREAKING-NEWS “மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்?

who-is-congress-lok-sabha-chief

நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில் இதுவரை மக்களவை காங்கிரஸ் தலைவர் யார் என்பது தேர்வு செய்யப்படவில்லை.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 10 சதவிகித இடத்துக்கும் குறைவான இடங்களையே கைப்பற்றியதால் இப்போதும் மக்களவை பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் இழந்துள்ளது. ஏற்கனவே நடை‌பெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் மக்கள‌வை காங்கிரஸ் தலைவர் யார் என்பது தேர்வு செய்யப்படவில்லை. 

இன்று மக்களவை கூடிய நிலையில் இதுவரை மக்கள‌வை காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. அவையில் கட்சி எம்பிக்களை யார் வழி நடத்த போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையே இந்த பதவிக்கு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கேரளாவை சேர்ந்த கே.சுரேஷ் மற்றும் சசி தரூர், பஞ்சாபை சேர்ந்த மணிஷ் திவாரி ஆகியோர் போட்டியிடுவதாக த‌கவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close