[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

திருநங்கைகள் மீது கொடூர தாக்குதல் நடத்திய போலீஸார் - வீடியோ

police-misbehaved-with-transgenders

உத்தரப்பிரதேசத்தில் காவலர்கள் சிலர் திருநங்கைகளை இரக்கமற்று தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஃபாவாரா சௌக் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு திருநங்கைகள் சிலர் ஆசி வழங்க சென்றுள்ளனர். திருநங்கைகள் இரண்டு தரப்பாக சென்ற நிலையில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.  ஒருகட்டத்தில் வாக்குவாதம் முத்தி அவர்களுக்குள் கைகலப்பு வரை சென்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

போலீசார் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்ற பின்னனரும் கூட அமைதியாகாமல் தொடர் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்களை கட்டுப்படுத்த காவல்நிலைய வளாகத்தில் வைத்து சில காவலர்கள் திருநங்கைகளை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளரான நிதின் திவாரி கூறும் போது, “ திருநங்கைகள் மிகவும் அத்துமீறி நடந்துக் கொண்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வந்தால், அதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும். இருதரப்பு திருநங்கைகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close