[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

பாஜகவில் இணைந்த பங்களாதேஷ் நடிகை!

bangladeshi-actress-anju-ghosh-joins-bjp

பிரபல பங்களாதேஷ் நடிகை அஞ்சு கோஷ், பாஜகவில் இணைந்தார். அவரின் குடியுரிமை பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பிரபல பங்களாதேஷ் நடிகை அஞ்சு கோஷ் (53). இவர் நடித்து 1989 ஆம் ஆண்டு வெளியான படம், ’படேர் மேய ஜோஸ்னா’. பங்களாதேஷ் வரலாற்றில் அதிக வசூல் சாதனை செய்த படம் இதுதான். இந்த படம் மேற்கு வங்கத்திலும் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அஞ்சு கோஷ் பிரபல நடிகையானார்.

இந்நிலையில் இவர், கொல்கத்தா பாஜக தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பாஜகவில் இணைந்தார். அப்போது அவரிடம் இந்திய குடியுரிமை பற்றி கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்துள்ளன. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை எப்படி பாஜக தனது கட்சியில் சேர்த்துக்கொண்டது என்று கேள்வி எழுப்பியுள்ளன. 

தேர்தலின் போது பங்களாதேஷ் நடிகர்கள் சிலர், திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போது, அதை பாஜக கடுமையாக எதிர்த்தது. இதனால் அவர்கள், நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இப்போது மட்டும் பாஜக, வெளிநாட்டுக்காரரை எப்படி கட்சியில் சேர்த்தது என்று அந்தக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் திப்தான்சு சவுத்ரி கூறும்போது, ‘’விரைவில் பாரதிய ஜனதா, பங்களாதேஷ் ஜனதா கட்சியாக மாறும். அதற்கு இவர்தான் சரியான தேர்வு. உண்மையிலேயே பாஜக சர்வதேச கட்சிதான்’’ என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள பாஜக, அஞ்சு கோஷிடம் இந்திய பாஸ்போர்ட் உள்ளது என்றும், அவரிடம் வாக்காளர் அடையாள அட்டையும் உள்ளது எனவும் அவர் கடந்த தேர்தலில் வாக்களித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close