[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

கார்கில் வீரர் விவகாரம்: விசாரணை அதிகாரிக்கு எதிராக சாட்சிகள் வழக்கு!

witnesses-file-cases-against-assam-police-officer-who-reported-kargil-veteran-as-foreigner

கார்கில் வீரரை வெளிநாட்டவர் என்ற விவகாரத்தில், விசாரணை அதிகாரிக்கு எதிராக சாட்சிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 

அசாமில், பங்களாதேஷை சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதால் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டு இருந்தன. மேலும் 37 லட்சம் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தன. இரண்டு லட்சம் பெயர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டன.

இந்நிலையில், கவுகாத்தி, சத்கோன் பகுதியை சேர்ந்த முகமது சனாவுல்லா (57) என்பவர் வெளிநாட்டை (பங்களாதேஷ்) சேர்ந்தவர் என சந்தேகம் இருப்பதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கார்கில் போரில் கலந்து கொண்டவர். இதற்காக குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் எல்லைப் பாதுகாப்பு போலீசில், துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவரது குடியுரிமை தொடர்பான வழக்கை, வெளிநாட்டினர் தீர்ப்பாயம் விசாரித்தது. இறுதியில், முகமது சனாவுல்லா வெளிநாட்டுக்காரர்தான் என தீர்ப்பாயம் உறுதி செய்து, தடுப்பு முகாமுக்கு அனுப்பியது. அவர் இப்போது தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

சனாத்துல்லாவின் உறவினர் முகமது அஜ்மல் ஹோக் என்பவர் கூறும்போது, ‘’ஓய்வு பெற்ற ராணுவ வீரரை இதை விட மோசமாக நடத்த முடியாது. 30 வருடமாக ராணுவத்தில் பணியாற்றியவருக்கு கிடைத்த பரிசு இதுதானா?’’ என்றார்.

இந்நிலையில் அவரை தடுப்புக் காவலில் வைத்துள்ளதை எதிர்த்து கவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் சனாவுல்லா குடும்பத்தினர் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று ராணுவமும் கைவிரித்துவிட்டது. இருந்தாலும் இது சட்டரீதியான பிரச்னை என்பதால் உதவுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, சனாத்துல்லா விவகாரத்தில், குர்பான் அலி, முகமது ஷோபன் அலி, அஜ்மல் அலி ஆகிய மூன்று பேரை விசாரணை அதிகாரி சந்திரமால் தாஸ் (தற்போது ஓய்வுபெற்றுவிட்டார்), சாட்சிகளாகச் சேர்த்துள்ளார். இதை அறிந்த அந்த மூன்று பேரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சனாத்துல்லாவுக்கு எதிராக தாங்கள் சாட்சி எதுவும் சொல்லவில்லை என்றும் விசாரணை அதிகாரியை சந்தித்ததே இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்த மூன்று சாட்சிகளும் தங்கள் கையெழுத்தையும் ஆவணங்களையும் விசாரணை அதிகாரி சந்திரமால் தாஸ் போலியாக தயாரித்துள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close