[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

கூட்டணி கட்சி அமைச்சரின் பதவியை பறித்த யோகி ஆதித்யநாத்

day-after-exit-polls-yogi-adityanath-removes-bjp-ally-from-up-cabinet

பாஜகவிற்கு‌ எதிராக கருத்து தெரிவித்த அமைச்சர் ஒருவரை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி நீக்கியுள்ளார். 

உத்தரப்பிரதே‌த்தில் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அவருக்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளி மேம்பாட்டுத்துறைக்கான அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். 

இதனால் அவரை பதவியில் இருந்து நீக்கும்படி ஆளுநருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடிதம் எழுதியிருந்தார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் வெளியாகி அதிக இடங்களை பாஜக வெல்லும் எனத் தேசிய ஊடகங்கள் அனைத்தும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கூட்டணி கட்சித் தலைவரின் அமைச்சர் பதவி பறிபோனது உத்தரப்பிரதேசத்தில் பேசு பொருளாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close